மேலும் இச்சாலையில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை நடு வில் குடிநீரானது குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சா லையில் பயணம் செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. நேற்று காலை பனியன் துணிகளை ஏற்றி சென்ற சரக்கு வேன் சாலையின் நடுவே, பள்ளத்தில் சிக் கிக் கொண்டது.
இதன்காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மேலும், அவ்வழியாக செல்லக்கூடிய பள்ளி வாக னங்கள் மற்றும் பணிக்குச் செல்லக்கூடிய தொழிலாளர்கள் என பலரும் செல்ல முடியாமல் செவந்தம்பாளையம், முத்த னம் பாளையம் வழியாக காங்கயம் சாலையை சென்றடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரி தும் அவதிப்பட்டனர். அதனால்பழுதான சாலையை சீர மைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.