தூத்துக்குடி மாவட்டம், முதலைமொழியைச் சேர்ந்த வினோத் (23) என்பவர், திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், அவரை குழந்தையுடன் அழைத்துச் சென்று கூலி வேலை செய்து வந்துள்ளார். அந்தப் பெண் தொடர்பாக வினோத்துக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினோத், கடந்த 29-ஆம் தேதி தோட்டத்திலிருந்த பூச்சி மருந்தைக் குடித்துகரூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.