திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் நேற்று மாநகர மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நசீர் (34) என்பதும், அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.