திருப்பூர்: தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக இன்று மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளுடன் கே.சி.எம்.பி சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளரை சந்தித்து காலை கே.வி.ஆர் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கான ஆதாரங்களை கொடுத்தும், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கியும், மத்திய காவல் நிலையம் செயல்பாடுகள் குறித்தும் துணை ஆணையாளர் அவர்களிடம் நேரடியாக காரணங்களை விளக்கி கூறினார்கள். 

மேலும் தாளாளர் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் என்றும் அதிக காலம் இதற்கு கொடுக்க முடியாது என்றும் காவல்துறையிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டு வந்தனர். நேற்று இந்த நிகழ்வை வெளியுலகத்துக்கு கொண்டு வந்தது முதல் இன்று காலை போராட்டத்தில் முன்னெடுத்தது வரை திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி முன் நின்று செய்து வருகிறது. மற்ற அமைப்புகள் போல் இதில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்ய விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், மறைக்க முயற்சி செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி