கொடுவாய் பகுதியைச் சேர்ந்த பாரதியார் குருகுலம் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு லாங்சைஸ் நோட்டுகள் தேவை எனப் பதிவிட்டதைத் தொடர்ந்து நேற்று (31.07.2025) இரவு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக உடுமலை ஈஸ்வரன் பங்களிப்பில் அனைத்துக் குழந்தைகளுக்கும் நோட்டுகள் வழங்கப்பட்டன. உண்மையான அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அது உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயலாலும் உணர்த்தப்படுகின்றன. மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை பல்வேறு பொதுநலச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.