திருப்பூர்: மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்றக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் M.K. ஸ்டாலின் அவர்கள் - மாண்புமிகு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு K.N. நேரு அவர்களின் ஆலோசனைப்படி இன்று திருப்பூர் மேயர் தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம், மாமன்றக் கூட்டரங்கில், மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, திடக்கழிவு மேலாண்மை, பாதாளச்சாக்கடை திட்டங்கள் மற்றும் பலதிட்டங்களைப் பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு. அமித் இ.ஆ.ப, துணை மேயர் திரு. ரா. பாலசுப்ரமணியம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி