பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஎஸ்ஐ கோவை மண்டல அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 என்ற புதிய திட்டத்தை திருப்பூர் தொழில் துறையினருக்கு அறிமுகம் செய்ய சைமா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தகுதியான தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுள்ளது. தாமதமான பதிவுகளுக்கு எந்த விதமான அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லை என்பது இதன் சிறப்பு அம்சமாக உள்ளது. இதனை பயன்படுத்தி தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து கொள்ளலாம் எனவும் இணையதளத்தின் மூலம் இந்த திட்டத்தை எளிதாக அணுகி சுய பதிவு செய்து கொள்ளலாம். கோவையில் உள்ள அனைத்து கிளை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைத்துள்ளோம் என தெரிவித்தார்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?