திருப்பூர்: கொலை முயற்சி வழக்கு; பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு

திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியில் 2024-ல் நடந்த கொலை முயற்சி வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணையில் புலன் விசாரணை அதிகாரியான அப்போதைய அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஏற்கனவே மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் வழக்கின் விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி