திருப்பூர்: கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முறையான சிக்னல் கொடுக்காமல் திரும்பிய கேரள பதிவெண் கொண்ட கார் காரணமாக, பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 கார்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரை நிறுத்திய நபருக்கும் மற்ற ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி