திருப்பூர்: நோட்டாவுக்கு பதிவான 8,526 வாக்குகள்.. அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் மொத்தம் 8,526 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. தபால் வாக்குகள் மூலம் 139 மற்றும் EVM மூலம் 8,387 என மொத்தம் 8,526 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. குறிப்பாக, அவிநாசி தொகுதியில் 1,563, பல்லடம் தொகுதியில் 1,417, உடுமலை தொகுதியில் 1,149, திருப்பூர் வடக்கில் 1,078, தாராபுரத்தில் 1,058 என அதிக எண்ணிக்கையில் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்கு முனை போட்டி நிலவிய சூழலிலும், புதிய கட்சிகள் போட்டியிட்ட போதிலும், சராசரியாக தொகுதிக்கு 1000 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி