திருப்பூர்: ரூ.35 லட்சம் மோசடி செய்த இருவர்

திருப்பூர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி பனியன் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில், குமாரசாமி வி.ஜே. என்ற பெயரில் பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் டையிங் நிறுவனம் நடத்தி வரும் ஆறுமுகசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகசெந்தில் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் தொழில் ரீதியாக குமாரசாமிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், குமாரசாமி இடமிருந்து நாகசெந்தில் மற்றும் இளையராஜா இருவரும் கடனாக 35 லட்சம் ரூபாய் பணம் வாங்கிய நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கடந்த ஒரு வருடமாக மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதனிடையே பணத்தை மீட்டுத் தரக் கூறி குமாரசாமி, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அடியார்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், மோசடியில் ஈடுபட்ட இருவரும் பணப்பலத்தை பயன்படுத்தி பல்லடம் காவல் நிலையத்தில் தன் மீது பொய்ப் புகார் அளித்துள்ளதாக குற்றம் சாட்டும் குமாரசாமி. தன்னைப் போல நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாலு கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட குமாரசாமி உட்பட 20க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி