திருப்பூர் தெற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட பாலமுருகன் என்பவர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றார். இதையடுத்து திருப்பூர் திரும்பி அவர் இன்று முதல்முறையாக திருப்பூரில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது பூத் ஏஜெண்டாக பணியாற்றிய தன்னை புதிதாக இணைந்த மாற்று கட்சியினர் எம்எல்ஏவை அணுக விடாமல் தடுப்பதாக ஒரு பெண் குற்றஞ்சாட்டினார்.