திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த உதவிகளைப் பெற, சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் குடும்பத்தில் ஒருவர் உறுப்பினராகப் பதிவு செய்து தகுதி பெறலாம்.