கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் என பள்ளி மேலாண்மை குழு வேதனை.

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கஞ்சா மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால் பற்றாக்குறை நிலவுகிறது. பள்ளி மேலாண்மை குழு மூலம் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களிடம் கஞ்சா, சிகரெட் கண்டெடுக்கப்பட்டது பள்ளி மேலாண்மை குழுவினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி