கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் ரயில்களில் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். நேற்று காலை 10.15 மணியளவில் திருப்பூரில் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் நின்றபோது, ஆந்திராவில் இருந்து வந்த அய்யப்ப பக்தர் ஒருவர் தனது மகளுடன் இறங்கி தின்பண்டங்கள் வாங்கினார். ரயில் புறப்பட்டதும் அவரால் ஏற முடியவில்லை. கடைசி பெட்டியில் இருந்த கார்டு மனோஜ் இதை கவனித்து சைகை மூலம் ரயில் நிறுத்த சிக்னல் கொடுத்தார். ரயில் சிறிது தூரம் சென்றதும் நிறுத்தப்பட்டு, பக்தர் தனது மகளுடன் ஏறினார். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் கார்டை பாராட்டினர்.