திருப்பூர்: தி.மு.க நிர்வாகிகள் வாக்குவாதம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

உட்கட்சி விவகாரம் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் வாக்குவாதம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பெருமாநல்லூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மேயர் தினேஷ் குமார் கலந்துகொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து சென்றுவிட்டார். சற்று நேரத்தில் உட்கட்சி விவகாரம், பணப் பிரச்சினை சம்பந்தமாக கட்சி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தி.மு.க. நிர்வாகி மீது குற்றம் சாட்டப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது மனைவி அதனை நிரூபிக்க வேண்டும் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இருதரப்பினரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் நடுரோட்டில் திட்டிக்கொண்டனர். மோதல் ஏற்படும் சூழலும் காணப்பட்டது. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சமாதானப்படுத்தி அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி