திருப்பூர் மாவட்ட நலச்சங்க கூட்டம், சமூக பங்களிப்பாளர்களுடன் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை தாங்கி பேசினார். உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் அரசு துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுதல், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக பங்களிப்பாளர்கள் உதவலாம். மேலும், மலைவாழ் கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற தேவைகளையும் நிறைவேற்ற உதவலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.