ஐந்து காட்சிகள் திரையிட அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி.

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பாக, முதலமைச்சரை சந்தித்து ஒன்பது அம்ச கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக, நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி கோரப்பட்டது. தற்போது, புதிய திரைப்படங்கள் வெளியானால் ஏழு நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் மற்றும் பண்டிகை, விசேஷ காலங்கள், சனி, ஞாயிறு போன்ற தினங்களில் ஐந்து காட்சிகள் திரையிட்டு கொள்ள முன் அனுமதி தேவையில்லை என நிரந்தர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி