திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் தமிழக வெற்றிக்கழக நகர தலைமை அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி. கே. சங்கர் அலுவலகத்தை திறந்து குத்துவிளக்கேற்றி தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் நகர இணை செயலாளர் வையாபுரி, நகர பொருளாளர் ராஜு, நகர துணைச் செயலாளர் சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன்தாஸ், நகர மாணவரணி அமைப்பாளர் லட்சுமணன், நகர தொண்டரணி அமைப்பாளர் சபரி, நகர மகளிர் அணி அமைப்பாளர் பரிமளா, நகர தொழிற்சங்க அமைப்பாளர் ராஜசேகர், நகரத் தொழிலாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.