திருப்பூர் மத்திய மாவட்ட தி. மு. க. இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி. மு. க. பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்பாரி, தெற்கு ஒன்றிய பொருளாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கோபால், ஒன்றிய பாளர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், தெற்கு ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் முகமது இத்ரீஸ், மங்கலம் பள்ளிவாசல் வீதி கிளை செயலாளர் ஏ. எஸ். நூர் முகமது, தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.