டிசைன் ஸ்டூடியோவை பார்வையிட்ட சைமா நிர்வாகிகள்

திருப்பூர் பேஷன் கிளஸ்டர் சார்பில் நிப்ட்-டீ கல்லூரியில் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் டிசைன்ஸ் ஸ்டூடியோ விரைவில் திறக்கப்பட உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கி கூறும் வகையில் சிறப்பு கூட்டம் கல்லூரியில் நடைபெற்றது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் ஆடை வடிவமைப்பு, மாதிரி தயாரிப்பு, புதிய டிசைன் மேம்பாடு, தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி