திருப்பூர்: மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி(வயது 53). இவருக்கு திருமணமாகி மீனாட்சி(45) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மணி திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக (மேற்பார்வையாளர்) பணியாற்றி வந்தார். மீனாட்சி அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் காணப்பட்ட மணி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி