இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'பிடிபட்டது 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான். அவினாசி அருகே மான்கள் அதிகம் உள்ளன. அங்கிருந்து தப்பி வந்த புள்ளி மான், கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரில் ஸ்ரீசக்தி தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றுக்குள் சுற்றித் திரிந்ததை மக்கள் பார்த்து வனத்துறையிடம் தெரிவித்தனர். நாங்கள் வரு வதற்குள் அந்த மான் அங்குமிங்கும் போக்கு காட்டியபடி இருந்தது. இந்தநிலையில் அந்த மானை நாய்கள் விரட்டிய தால் பயந்து பள்ளி வளாகத்துக்குள் நுழைந்துவிட்டது. அங்கி ருந்தவர்கள் கேட்டை பூட்டிவிட்டு தகவல் தெரிவித்ததால் லாவ கமாக பிடித்தோம். பிடிபட்ட மான் காப்புக்காட்டில் விடப்பட்டது' என்றார்.
திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் புள்ளிமானை வனத்து றையினர் பிடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.