போத்தனூர்-சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண். 06028) வருகிற 8-ந்தேதி போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 9-ந்தேதி இரவு 12.10 மணிக்கு வந்து 12.12 மணிக்கு புறப்படும். சென்னை-போத்தனூர் சிறப்பு ரெயில் (06027) வருகிற 9-ந்தேதி சென்னையில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு மாலை 4.30 மணிக்கு வந்து 4.32 மணிக்கு புறப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
ராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாத தாக்குதல்: 5 வீரர்கள் பலி