ஹோலி பண்டிகையை முன்னிட்டு, போத்தனூர்-பராவுனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும். சிறப்பு ரயில் நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 9-ந்தேதி இயக்கப்படும். போத்தனூரில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர் வழியாக பராவுனிக்கு சென்றடையும்.