நேற்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தகுதியான நபர்களுக்கு தான் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா? , ஏதேனும் முறைகேடுகள், விதிமீறல் கள் நடத்துள்ளதா? என குழுவினர் விசாரணை மேற்கொண் டனர். திருப்பூர் மாவட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஸ்கூட்டர்களை பெற்ற பயனாளிகள் பட்டியலை சிறப்புக்குழு வினர் ஆய்வு செய்தனர். மேலும் விசாரணைக்காக மாற்றுத் திறனாளிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அறிக் கையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந் தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்