திருப்பூர்: அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உலகம் முழுவதும் ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் சாமிதரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி