வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஆணையாளர்ஆய்வு

திருப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விஜயாபுரம் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். இந்தப் பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர், சுகாதார அதிகாரி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி