பெருமாநல்லூர் அருகே ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட துணை வட்டாட்சியர் அலுவலக தணிக்கை அதிகாரி ஜெயந்தி, ஊராட்சி செயலாளர் தனபால், முன்னாள் ஊராட்சி தலைவர் ராதாமணி சிவசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அப்பகுதியில் வீடு இல்லாமல் வசிக்கும் ஏழை மக்களுக்கு அரசு திட்டங்களின் மூலம் வீடுகள் வழங்குவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதற்கான விண்ணப்பங்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.