சமூக ஊடக அவதூறு: நபர் மீது குண்டாஸ் சட்டம் கோரி மனு

திருப்பூர் மாவட்ட இல்லத்து பிள்ளைமார் சங்கத்தினர், சமூக ஊடகங்களில் ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் அவதூறு பரப்பியதாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அம்பி வெங்கடேசன் மீது நடவடிக்கை கோரி மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தினரையும் பெண்களையும் இழிவுபடுத்தி பேசியதுடன், சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் குறித்தும் அவமரியாதையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி