திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் அளித்த மனுவில், பழைய யுனிவர்சல் தியேட்டர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்சில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். கடந்த வாரம் திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் பொம்மநாயக்கன்பாளையம் ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.