திருப்பூர்: குப்பையில் தீப்பிடித்து எரிந்ததால் புகைமூட்டம்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை கருமாரம் பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தின் பின்புறம் குவிக்கப்பட்டிருந்த குப்பையில் நேற்று (பிப்.22) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி