திருப்பூர் அவினாசி ரோடு எஸ். ஏ. பி. பஸ் நிறுத்தம் அருகே ஸ்டேஷனரி கடை நடத்தி வருபவர் சிவராம பெருமாள் (வயது 50). இவர் 19 வயது கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராம பெருமாளை கைது செய்தனர்.