அவிநாசி – அன்னூர் சாலையில் தொடர் மோதல்.. சிசிடிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அவிநாசி–அன்னூர் சாலையில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட பகுதியில் கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் இடையே தொடர் மோதல் விபத்து ஏற்பட்டது. முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்ற கார், எதிரே வந்த லாரி மீது மோதியதில் அருகில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களும் சிக்கின. இந்த விபத்தில் மூவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி