திருப்பூர் மின்பகிர்மான வட்ட திருப்பூர் கோட்டத்தின் சார் பில் மின்களப்பணியாளர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை தாங்கி பேசினார். மின்களப்பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி மின்பணியாற்ற வேண்டும், மின்கம்பங்களில் வேலை செய்யும்போது எர்த்ராடு அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.