ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தர்ணா

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் நல்ல சேனாதிபதி தலைமை தாங்கினார். சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜசேகர் கண்டன உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி