திருப்பூர் மாநகரப் பகுதியில் காலியிடங்கள் மற்றும் சாலையோரங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. காங்கயம் சாலையில் கழிவுகளை கொட்டிய ஒருவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், 25-வது வார்டு லிங் கேகவுண்டர் வீதியில் குப்பை சேகரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் அமித் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதை அவர் பார்வையிட்டார்.