சாலை பணியாளர்கள் போராட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், கண்களில் கருப்பு துணியை கட்டி, நீதி தாரசை கையிலேந்தி கும்மியடித்து முழக்கப் போராட்டம் நடைபெற்றது. கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி