திருப்பூர், தாராபுரம், ஈரோடு, கரூர் கோட்டங்களில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை தலைமை பொறியாளர் செந்தில் நேற்று ஆய்வு செய்தார். பல்வேறு பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட அவர், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது கோட்ட மேற்பார்வை பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர்கள் கவிதா, சுரேஷ், செந்தில் அரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.