புதிய தெருவிளக்குகள் அமைக்க ஆய்வுக்கூட்டம்திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கும் தெரு விளக்குகள் மற்றும் மின்வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் ராமமூர்த்தி, துணை ஆணையாளர் சுந்தரராஜன், தலைமை பொறியாளர் செல்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வார்டு வாரியாக புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட தெருவிளக்குகள் விவரம், அதில் எத்தனை தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, புதிதாக கம்பிகள் இழுத்து மின்கம்பம் அமைக்க வேண்டிய பணி விவரங்கள், காலதாமதம் ஆகும் பணி விவரங்கள், தெருவிளக்குகள் பொருத்த வேண்டிய இடங்களின் விவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.