திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் அளித்த மனுவில், 'பெரியகடை வீதி, நொய்யல் வீதி பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பெரியகடை வீதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் நொய்யல் வீதி அரசு பள்ளியும், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. மாணவ- மாணவிகள் அந்த வீதி வழியாக செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுபோல் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. சாலையை விரிவாக்கம் செய்தும், வாகன நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.