இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் வட்டார அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெள்ளகோவில் வட்டாரத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றிய பாலமுருகன் கும்பகோணத்துக்கும், திருப்பூர் வடக்கு வட்டாரத்தில் பணியாற்றிய தங்கவேல் கோவை மாநகராட்சிக்கும், உடுமலை வட்டாரத்தில் பணியாற்றிய விஜயகுமார் பழனிக்கும், தாராபுரம் வட்டாரத்தில் பணியாற்றிய சிரஞ்சீவி சின்னமனூர் பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக கோவை மாநகராட்சியில் பணியாற்றிய பாலசுப்பிரமணியன், நரசிம்மன், ராமச்சந்திரன், கரூரில் இருந்து மதுரைவீரன் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.