ராசிபுரம்: மகன் அமைச்சரானதில் மகிழ்ச்சி - முன்னாள் சபாநாயகர் தனபால்

ராசிபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் தமிழக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ஆவார். "என் மகன் அமைச்சராக பதவியேற்று இருக்கிறார், சந்தோஷமாக பார்க்க வந்திருக்கிறேன்" என முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி அளித்தார். மேலும் அதிமுகவில் தற்போது நிலவும் சூழல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தவறு செய்தவர்கள் அதை அனுபவிக்கிறார்கள். பலரை புறக்கணித்தவர்களை இன்று மக்கள் புறக்கணித்துள்ளார்கள்" என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி