ரெயில் நிலையம் மேம்பாலம் – மக்கள் பயத்தில்!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள நடைபாதை மேம்பாலம் மோசமான நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தியும், குப்பைகளை கொட்டியும் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போதையில் சிலர் அங்கேயே உறங்குவதாலும், இயற்கை உபாதைகள் கழிப்பதாலும் துர்நாற்றம் வீசுவதாகவும், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த மேம்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி