பல்லடம்: மின்தூக்கி பழுதானதால் பொதுமக்கள் அவதி

திருப்பூர்-பல்லடம் சாலையில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. கலெக்டர் அலுவலகம் தரைத்தளம் உள் ளிட்ட 7 தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், பள்ளிக்கல்வித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அலுவலகங்க ளுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் சிரமமின்றி 7-வது தளம் வரை சென்றுவர நுழைவு வாயில் பகுதியில் 2 மின்தூக்கி மற்றும் பின்பகுதியில் 2 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் உள்ள 2 மின்தூக்கிகள் பழுதானது. இதனால் நுழைவு வாயிலில் உள்ள மின்தூக்கி மட்டும் பயன்பாட்டில் இருந்தது. தொடர்ந்து அலுவலகங்களுக்கு செல்லும் அதிகாரிகள் மற் றும் பொதுமக்கள் மின்தூக்கியில் செல்ல சிரமத்திற்குள்ளா கினர். நுழைவு வாயிலில் அமைந்துள்ள மின்தூக்கியில் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட் டது. கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வதால் மின்தூக்கிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி