திருப்பூர்: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட கீதாநகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நேற்று முன்தினம் காலை 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் சிறுபூலுவபட்டி பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை பெய்தபோதும் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி