வருங்கால வைப்பு நிதி திட்ட முகாம்

மத்திய அரசின் விக்ஷித் பாரத் திட்டம், அடுத்த 2 ஆண்டுகளில் 3½ லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதிய தொழிலாளர்களை வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஜவுளித்துறைக்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் பதிவு முகாம் திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் நடைபெற்றது. வருங்கால வைப்பு நிதி அலுவலக கமிஷனர் அபிஷேக் ரஞ்சன் வழிகாட்டுதலின்படி இந்த முகாம் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி