திருமுருகன்பூண்டி: வீட்டில் விபசாரம்; பெண் புரோக்கர் கைது

திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம்-கணியாம் பூண்டி சாலையில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதன் பேரில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியபோது அங்கு விபசாரம் நடப் பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பெண் புரோக்கரான மாஸ்கோநகரை சேர்ந்த காயத்ரி (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கரூரைச் சேர்ந்த 31 வயது அழகியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி