திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, ஐ. டி. ஐ. , டிப் ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். வேலைதேடுபவர்கள், https://www.tnprivatejobs.tn.gov.in/ பதிவு செய்யலாம்.