திருப்பூரை பாராட்டிய பிரதமர் மோடி

ஜவுளி கழிவுகள் மேலாண்மை:திருப்பூரை பாராட்டிய பிரதமர் மோடிமனதின் குரல் நிகழ்ச்சியில் ஜவுளி கழிவுகள் மேலாண்மை குறித்து பேசிய பிரதமர் மோடி, திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகளை பாராட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது: -உலகில் அதிகபட்ச ஜவுளி கழிவுகள் உருவாகும் 3-வது நாடாக இந்தியா உள்ளது. நாம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறோம் என்பதே இதன் பொருள். ஆனால் இந்த சவாலை சமாளிக்க நம் நாட்டில் பல பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜவுளி கழிவுகளைக் கையாள்வதில் சில நகரங்கள் தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குகின்றன. அவற்றில் அரியானாவின் பானிபட், தமிழ்நாட்டின் திருப்பூர் ஆகிய நகரங்கள் குறிப்பிடத்தக்கவை.பானிபட் ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருவும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது.அதேபோல தமிழ்நாட்டின் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஜவுளி கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுகிறது. இது பாராட்டப்பட வேண்டியது. இவ்வாறு மோடி கூறினார்.

தொடர்புடைய செய்தி